காது கேளாத பெண் ஒருவர் முதன் முறையாக 'மிஸ் தென் ஆப்ரிக்கா' பட்டம் வென்று அசத்தல்
மிஸ் தென் ஆப்பிரிக்கா 2024 போட்டியில் முதல் முறை காது கேளாத பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
“இது ஒரு கனவு போல உள்ளது,” என்று கூறும் அவர், “நான் சிறுமியாக இருந்தபோது, என்னைப்போல ஒருவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா ஆக முடியும் என கனவில் கூட நினைத்ததில்லை,” என்கிறார்.
சமூகத்தால் ஒதுக்கப்படும் தன்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மேடை ஏறியதாக அவர் கூறூகிறார்.
“நான் மிஸ் தென் ஆப்பிரிக்கா மேடை ஏறியபோது மிகவும் பயமாக இருந்தது
ஆனால், எனது எல்லைக்குள்ளேயே இருந்தால், எனது குரல் கேட்கப்படாமலே போகும் என எண்ணினேன். அதனால் ஒரு மேடையில். ஏறவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் சமுதாயம் ஒதுக்கப்பட்ட என் குரலைக் கேட்கும்,” என்கிறார்.
அவரது கதையை அவரது குரலிலேயே கேளுங்கள், காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



