பாகிஸ்தானின் தோல்வி பற்றி காட்டம் தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

காணொளிக் குறிப்பு,
பாகிஸ்தானின் தோல்வி பற்றி காட்டம் தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.

வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார், ஆனால் இந்த முடிவு போட்டியில் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை.

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வரும் போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு ஒரே சீராக இருந்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 வைடு பந்துகளை வீசினார். அந்த ஓவரில் 11 பந்துகள் வீசப்பட்டன. 17 எக்ஸ்ட்ராஸ் ரன்களை இந்திய அணி கொடுத்தது. இந்திய ரசிகர்கள் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

9வது ஓவரின் 2வது பந்தில் பாபர் ஆசம்-ன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சாதகமாக ஏதும் நடக்கவில்லை.

50 ஓவர்கள் நிறைவடைய 2 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 42வது ஓவரின் மூன்றாவது பந்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிய இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது.

இந்த வெற்றியால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்தை எட்டியது மற்றும் பாகிஸ்தான் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதே பிரிவில் இரண்டாமிடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் வங்கதேச அணிகளும் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)