காணொளி: 'தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி' - விஜய் பேச்சு

காணொளிக் குறிப்பு, 'தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி' - விஜய் பேச்சு
காணொளி: 'தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி' - விஜய் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தவெக ஆதராவளர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து பேசினார்.

அப்போது, "தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் இத்தனை நாள் ஆட்சி செய்த உங்களின் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி" என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு