காணொளி: சட்டவிரோத வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட ‘மூன் கரடி’ குட்டிகள்

காணொளிக் குறிப்பு, சட்டவிரோத வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட ‘மூன் கரடி’ குட்டிகள்
காணொளி: சட்டவிரோத வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட ‘மூன் கரடி’ குட்டிகள்

இரண்டு மூன் கரடி குட்டிகள், லாவோஸில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்டன.

இவை 'ஆசிய கருப்பு கரடி' குட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 3 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவை. இந்த கரடி குட்டிகள் பிறந்து சுமார் இரண்டு மாதங்களே ஆகின்றன என நம்பப்படுகிறது.

இந்த கரடி குட்டிகள் அவற்றின் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. பின்னர் அவை சட்டவிரோதமாக செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன அல்லது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பித்தநீருக்காக அவை வளர்க்கப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு