ரஷ்யா நிலநடுக்கத்தால் ஜப்பான் கடற்கரையை சுனாமி தாக்கியது எப்படி?

காணொளிக் குறிப்பு, பசிபிக் பெருங்கடலில் சுனாமி
ரஷ்யா நிலநடுக்கத்தால் ஜப்பான் கடற்கரையை சுனாமி தாக்கியது எப்படி?

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடலில் இதனால் சுனாமி வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடற்பகுதியில் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அங்கே பெரிய அலைகள் உருவாகிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மக்கள் கட்டடங்களின் மேலே தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஹவாய் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கரையின் சில பகுதிகளில் உள்ள மக்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்புதான் தங்களின் முதல் நோக்கம் என்றும் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு