கத்தார்: இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து ஒதுங்கியது ஏன்?
போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்படுவதில் இருந்து கத்தார் விலகியுள்ளது.
இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தைக்குத் ‘தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும்’ போது தான் இந்தப்பணியை மீண்டும் துவங்க இருப்பதாகக் கத்தார் கூறியுள்ளது.
ஹமாஸ் பிரதிநிதிகள் கத்தாரில் இருப்பதை அமெரிக்கா இனி ஏற்காது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளது. காஸாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமீபத்தியத் திட்டங்களை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



