'ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்' - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்" - டிரம்ப்
'ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்' - டிரம்ப்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டிரம்ப் கூறுகையில், “இந்தியா (எண்ணெய் வாங்குவதை) நிறுத்தப் போவதாக என்னிடம் கூறினார்கள்.

அது ஒரு செயல்முறை, உடனே நிறுத்த முடியாது.

இந்த ஆண்டின் முடிவில் (எண்ணெய்) வாங்குவதை முழுவதுமாக குறைத்துவிடுவார்கள்.

அது பெரிய விஷயம், கிட்டத்தட்ட 40% எண்ணெய் இருந்தது.

இந்தியா சிறப்பாக நடந்துகொண்டுள்ளது.

பிரதமர் மோதியுடன் பேசினேன். அவர்கள் நன்றாக நடந்துகொண்டார்கள்.” என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு