காணொளி: வனத்துறை வாகனத்தை தாக்கிய 'பாகுபலி' யானை
காணொளி: வனத்துறை வாகனத்தை தாக்கிய 'பாகுபலி' யானை
மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, அங்குள்ள வன கல்லூரிக்குள் நுழைந்தது.
தகவலறிந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தின் சைரனை ஒலிக்க விட்டு யானையை விரட்ட முற்பட்டனர்.
அப்போது, ரோந்து வாகனத்தை யானை தாக்கியது. யானையை விரட்டும் முயற்சியில் எதிர்பாராத விதமாக யானையின் பின்னங்கால் ரோந்து வாகனத்தில் உரசியதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



