டவுன் சிண்ட்ரோம்: இவர்கள் இருவரின் திருமணம் கைக்கூடியது எப்படி?

காணொளிக் குறிப்பு, டவுன் சிண்ட்ரோம்: இவர்கள் இருவரின் திருமணம் கைக்கூடியது எப்படி?
டவுன் சிண்ட்ரோம்: இவர்கள் இருவரின் திருமணம் கைக்கூடியது எப்படி?

விக்னேஷ், அனன்யா இருவரும் டவுன் சிண்ட்ரோம் என்னும் குறைபாடு உடையவர்கள். இவர்கள் இருவரது திருமணமும் தற்போது பலராலும் பேசப்படுகிறது.

விக்னேஷ் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக உள்ளார். அனன்யாவோ ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சுதந்திரமாக வளரவேண்டும் என்று இருவரது பெற்றோரும் விரும்பினர்.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தோழமைக்கு ஏங்குவதை புரிந்துகொண்ட பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்துள்ளனர். ஜூலை 5ஆம் தேதி புனேவில் இவர்களது திருமணம் நடந்தது. தற்போது தனது மகள் புதிய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக அனன்யாவின் தாயார் தேஜஸ்விதா கூறுகிறார் (முழு தகவல் காணொளியில்)

டவுன் சிண்ட்ரோம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: