மமதா பானர்ஜி 'மைக்' அணைக்கப்பட்டதா? நிதி ஆயோக் கூட்டத்தில் என்ன நடந்தது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தன்னை பேச விடாமல் தனது மைக்கை ஆஃப் செய்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி குற்றஞ்சாட்டியிள்ளார் ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் பிரதமர் மோதி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்கப்போவதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் கேரள முதலலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போன்ற எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தான் பேசும்போது தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு மாநில அரசுகளிடம் பாரபட்சம் காட்ட கூடாது. நான் பேச விரும்புமேன். ஆனால் எனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனக்கு முன்னே பேசியவர்கள் 10-20 நிமிடங்கள் பேசினர்.
எதிர்க்கட்சிகளில் நான்மட்டும்தான் கூட்டத்தில் கலந்து கொண்டேன் ஆனாலும் எனக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை. இது என்னை அவமதிக்கும் செயல் என்றார்
ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சொல்வது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்
இதுகுறித்து ஏன் என் ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர்
மமதா பேனர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நாங்கள் அனைவரும் அவர் பேசியதை கேட்டோம். ஒவ்வொரு முதலமைச்சருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மேசையிலும் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் நேரம் டிஸ்ப்ளே செய்யப்பட்டது. ஊடகங்களிடம் பேசும் தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது முற்றிலும் தவறான செய்தி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
மம்தா பேனர்ஜியின் குற்றச்சாட்டு குறித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முதலமைச்சரை இப்படிதான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயத்தின் அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரிகளை போல நடத்தப்படக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சியில் அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்:ளார்
முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது குறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோ செய்தியில், பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து கொண்டே வருகிறது.
இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது சென்னை மெட் ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்காமல் இது மாநில அரசின் திட்டம் என நாடாளுமன்றத்திலேயே பதலளிக்கின்றனர்
இரண்டு முறை புயல்கள் தாக்கி கடும் பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. இதற்கு நிவாரணமாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டார்கள். இந்த பட்ஜெட்டில் வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர்
20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவோம் என்று கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என ஒன்றிய அரசு அடம் பிடிக்கிறது.
இது தமிழ்நாட்டை பழிவாங்ககூடிய பட்ஜெட் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பழி வாங்கக்கூடிய பட்ஜெட் என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



