அபார நினைவாற்றலால் கூகுள் காலண்டருக்கு சவால் விடும் ‘ஆட்டிசம்’ பாதிக்கப்பட்ட சிறுவன் – காணொளி

காணொளிக் குறிப்பு, திருப்பூரைச் சேர்ந்த சாய் சர்வேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.
அபார நினைவாற்றலால் கூகுள் காலண்டருக்கு சவால் விடும் ‘ஆட்டிசம்’ பாதிக்கப்பட்ட சிறுவன் – காணொளி

திருப்பூரைச் சேர்ந்த சாய் சர்வேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.

ஆனால், இவரது காலண்டர் நினைவாற்றலோ அபாரம்.

கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வரும் எந்த தேதியையும், மாதத்தையும் கூறினாலும், அது என்ன கிழமையில் வரும் என சரியாகச் சொல்லிவிடுகிறார்.

இதை இணையத்திடம் கேட்டால் கூட அது 'வெயிட் ஃபார் எ மொமென்ட்' என சொல்லி சர்வரில் தேடச் சென்றுவிடும். ஆனால், சாய் சர்வேஷ் நொடிப்பொழுதில் பதில் சொல்லிவிடுவார்.

இந்த திறமை யாரும் சொல்லிக் கொடுத்து வந்ததில்லை என்றும், தாங்களே எதார்த்தமாக அவரின் திறமையைக் கண்டு வியந்ததாகவும் கூறுகின்றனர் அவருடைய பெற்றோர்.

இதற்குக் காரணம் மூளையில் உள்ள நரம்பணுக்களின் இணைப்பில் ஏற்பட்ட மாற்றம்தான் என்கின்றனர் மூளை நரம்பியல் மருத்துவர்கள்.

செய்தியாளர்: கலைவாணி பன்னீர்செல்வம்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)