மெட்ரோ ரயில் கதவு மூடியதால் பெற்றோரை பிரிந்து நடைபாதையில் தவித்த 2 வயது குழந்தை
மெட்ரோ ரயில் கதவு மூடியதால் பெற்றோரை பிரிந்து நடைபாதையில் தவித்த 2 வயது குழந்தை
மும்பை பங்கூர் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது, கதவுகள் மூடப்படுவதற்கு முன்பு இரண்டு வயதுக் குழந்தை தனியாக ரயிலிலிருந்து இறங்கியுள்ளது.
இறங்கியவுடன் கதவுகள் மூடப்பட்டதால், மீண்டும் ரயிலில் ஏற முடியாமல் பிளாட்பாரத்திலேயே குழந்தை சிக்கிக்கொண்டது.
மெட்ரோ ரயில் புறப்பட இருந்த வேளையில், நடைமேடையில் நின்றிருந்த உதவியாளர் குழந்தை தனியாக இருப்பதைக் கவனித்து மெட்ரோ ஓட்டுநருக்கு சிக்னல் செய்து ரயிலை நிறுத்தினார்.
உதவியாளர் குழந்தையிடம் சென்று, மெட்ரோ ரயிலின் கதவுகள் திறக்கப்பட்டதும், குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



