காணொளி: டிரம்ப் திட்டத்துக்கு எதிராக போராட்டம் - என்ன நடக்கிறது?
காணொளி: டிரம்ப் திட்டத்துக்கு எதிராக போராட்டம் - என்ன நடக்கிறது?
கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்மொழிவுக்கு எதிராக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். கிரீன்லாந்து டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாகும்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தும் டிரம்ப் ராணுவ பலம் கொண்டு அதை கைப்பற்றுவதையும் அவர் நிராகரிக்கவில்லை.
மேலும், தனது முடிவுக்கு எதிராக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு சுங்கவரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



