காணொளி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேசியது என்ன?
காணொளி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேசியது என்ன?
அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் அக்டோபர் 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தனக்கு ஒரு நோட்டீஸ்கூட அனுப்பாமல் தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறிய கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் கட்சி விதிகள் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "53 ஆண்டுகாலம் இந்த இயக்கத்துக்காக உழைத்திருக்கிறேன். என்னை நீக்கியது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறியலாம் என்ற போக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுள்ளார்.” என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



