ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண் - காப்பாற்றிய காவலர்
ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண் - காப்பாற்றிய காவலர்
நாக்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண் ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காப்பாற்றியுள்ளார்.
கடந்த ஜூன் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்திலிருந்து புனே செல்லும் ரயில் ஒன்றில், ரயில் புறப்பட்ட பிறகு அதில் பெண் ஒருவர் ஏற முயன்றுள்ளார். ஆனால் அவரால் ரயிலுக்குள் ஏற முடியவில்லை. கீழே தவறி விழுந்துவிட்டார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட அவரை அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் துரிதமாக செயல்பட்டு உடனே காப்பாற்றினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



