காணொளி: அமெரிக்காவில் 37 வயது பெண்ணை துப்பாக்கியால் சுட்ட அதிகாரி
காணொளி: அமெரிக்காவில் 37 வயது பெண்ணை துப்பாக்கியால் சுட்ட அதிகாரி
அமெரிக்காவின் மினசோட்டா மினியாபொலிஸ் நகரில், அமெரிக்க குடிவரவு அதிகாரி ஒருவர் 37 வயது பெண்ணை சுட்டதில் அந்த பெண் உயிரிழந்தார். இது தற்காப்புக்காக நடந்தது என்ற டிரம்ப் நிர்வாகத்தின் விளக்கத்தை உள்ளூர் அதிகாரிகள் மறுத்ததைத் தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
சுடப்பட்ட பெண் “வன்முறை கலவரக்காரர்” என்றும் குடிவரவு அதிகாரிகளை வாகனத்தில் மோத முயன்றதாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால் மினியாபொலிஸ் மேயர் கூறும் போது “அதிகாரி அதிகாரத்தை பொறுப்பில்லாமல் பயன்படுத்தியதால்தான் ஒருவர் உயிரிழந்தார்” என்றார். மேலும், குடிவரவு அதிகாரிகள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



