காணொளி: குட்டி இறந்த கோபத்தில் வாகனங்களை தாக்கும் தாய்ப்புலி

காணொளிக் குறிப்பு, காணொளி: குட்டி இறந்த கோபத்தில் சாலையில் செல்லும் வாகனங்களைத் தாக்கும் தாய்ப்புலி
காணொளி: குட்டி இறந்த கோபத்தில் வாகனங்களை தாக்கும் தாய்ப்புலி

மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தின் கேஸ்லாகாட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு புலி வாகனங்களைத் தாக்கி வருகிறது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தப் புலிக்கு மூன்று குட்டிகள் இருந்ததாகவும், அதில் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாகவும், அதையடுத்து, தாய்ப்புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்கி வருவதாகவும் வனச்சரகர் ஆர்.டி. ஷெண்டே கூறினார்.

இந்த சம்பவங்களை அடுத்து, அந்தப் பகுதியில் சிறப்பு புலி பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு