காணொளி: அரசு அதிகாரிகளை காப்பாற்றிய மரம்
காணொளி: அரசு அதிகாரிகளை காப்பாற்றிய மரம்
மத்தியப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக குஞ்சாலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை ரத்தன்கர் அருகே அந்த ஆற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளின் கார் கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு மரத்தில் கார் சிக்கிக் கொண்டதால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பியது. வாகனத்தில் இருந்த 3 பேரையும் அப்பகுதி மக்களே பாதுகாப்பாக மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



