காணொளி: நேபாளில் எதிரிகள் போல சுடப்பட்ட ஜென் ஸி போராட்டக்காரர்கள்

காணொளிக் குறிப்பு, நேபாளில் எதிரிகள் போல சுடப்பட்ட ஜென் ஸி போராட்டக்காரர்கள்
காணொளி: நேபாளில் எதிரிகள் போல சுடப்பட்ட ஜென் ஸி போராட்டக்காரர்கள்

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் நேபாளத் தலைநகரில் இளம் போராட்டக்காரர்கள் குவிந்தனர். போராட்டத்தின் இரண்டாம் நாளில், அரசு கட்டடங்கள் தீக்கிரையாகின.

ஊழல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைனில் அவர்களின் கோபம் Nepo kids பக்கம் திரும்பியது. அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

காவல்துறை கண்ணீர்புகை குண்டுகள் மூலம் பதிலளித்தது. பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்தியது.

இது 17 வயதான ஷ்ரேயம் சௌலகைன் . அவரது பதாகையில் ‘இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக உள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு