விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் - சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்

காணொளிக் குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில் தப்பித்த நபர் தனது சகோதரரின் உடலுக்கு அஞ்சலி
விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் - சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்

ஆமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் விமான விபத்தில் உயிரிழந்த தன் சகோதரர் அஜய்யின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

ஏர் இந்தியா விபத்தில் விஸ்வாஸ் மட்டும் உயிர் பிழைத்திருந்தார். ஆனால் அதே விமானத்தில் பயணித்த அவரின் சகோதரர் அஜய் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் இன்னும் முழுதும் குணமாகாத நிலையில் குஜராத் அருகேயுள்ள டியு தீவில் நடந்த தனது சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு