காணொளி: சாலையில் கிடந்த பண மூட்டையை போலீஸில் ஒப்படைத்த பெண்

காணொளிக் குறிப்பு, சாலையில் கிடந்த பண மூட்டையை போலீஸில் ஒப்படைத்த பெண்
காணொளி: சாலையில் கிடந்த பண மூட்டையை போலீஸில் ஒப்படைத்த பெண்

மதுரை சிம்மக்கலில், அக்டோபர் 26ஆம் தேதி இரவு சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற செல்வமாலினி என்பவர் இதனை கவனித்து விளக்குத்தூண் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பையில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.17,50,000 ரொக்கம் இருந்துள்ளது. பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த செல்வமாலினியை பாராட்டிய போலீஸார், அது யாருக்கு சொந்தமானது என விசாரித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு