"என்னிடம் இருந்து அனைத்தையும் பறித்து விட்டீர்கள்"- பெற்றோரை இழந்த காஸா சிறுவன் வேதனை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி அன்று காஸா - இஸ்ரேல் இடையே மூண்ட மோதலின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் காஸாவின் அப்துல்லாவும் ஒருவர்.
தன்னுடைய பெற்றொர் மற்றும் மாமாவுடன் வசித்து வந்த 13 வயதான அப்துல்லா, மோதல் துவங்கியவுடன் இஸ்ரேல் அறிவித்த பாதுகாப்பான வழித்தடத்தில் சென்றதாக பிபிசியிடம் கூறுகிறார்.
ஆனால் அவர் பெற்றோருடன் பயணித்த வாகனம் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் அப்துல்லாவின் பெற்றோரும், மாமாவும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் தப்பிய அப்துல்லா தற்போது அவருடைய பாட்டி மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் பயன்படுத்திய பாதையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்று மறுப்பு கூறியதுடன், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் பிபிசியிடம் கூறியுள்ளது.
காஸாவில் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது? தற்போது அவரின் நிலைமை எப்படி இருக்கிறது? மோதல்கள் குறித்து அவர் கூற விரும்புவது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



