பாலமேடு ஜல்லிக்கட்டு: 15 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு - அவரது கோரிக்கை என்ன?
பாலமேடு ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மதுரை நத்தம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் இந்த பரிசை பெற்றார். காளைகளை பிடிக்கும்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும் இறுதிவரை காளையை அடக்கி விளையாடினார். மாடுபிடி வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த போட்டியில் சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயதங்க பாண்டியனின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சரின் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. தனது காளை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த பரிசை வெல்லும் என்று எதிர்பார்த்து வந்ததாகவும், இந்த ஆண்டு அந்த ஆசை நிறைவேறியதாகவும் தங்கபாண்டியன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



