குட்டியை கவனித்துக் கொள்ள தாய்க்கரடி போல வேடமிட்டுச் செல்லும் பராமரிப்பாளர்

காணொளிக் குறிப்பு, குட்டிக்காக தாய்க் கரடி போல வேடமிட்டு வளர்க்கும் பராமரிப்பாளர்
குட்டியை கவனித்துக் கொள்ள தாய்க்கரடி போல வேடமிட்டுச் செல்லும் பராமரிப்பாளர்

ஆதரவற்ற கரடிக் குட்டிக்காக பராமரிப்பாளர்கள் தாய்க்கரடி போல வேடமிட்டுள்ளனர். மனிதர்களுடன் பழக்கமாவதை தவிர்க்க, குட்டியை காட்டு வாழ்வுக்குப் பழக்க பராமரிப்பாளர்கள் கரடி வேடமிட்டு தாய்க் கரடியைப் போலச் செய்கின்றனர்.

கலிஃபோர்னியா காட்டில் 2 மாத கரடிக் குட்டி தன்னந்தனியாக, பசியுடன் மீட்கப்பட்டது. அன்றிரவே அதன் தாயுடன் குட்டியைச் சேர்க்க அதிகாரிகள் முயன்றனர். ஆனால், தாய்க் கரடி அங்கு வரவே இல்லை.

தற்போது இந்தக் குட்டி சான் டியாகோ காப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது. அது முழுமையாக குணமடைந்ததும் மீண்டும் காட்டில் விடப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு