காணொளி: மதராஸி படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்கள் கூறுவது என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லரக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'அமரன்' படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பதாலும், 2020ல் தர்பார் படத்திற்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருப்பதாலும் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.
இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்துள்ளதா? ரசிகர்கள் சொல்வது என்ன?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



