உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவுடன் பிபிசி தமிழ் உரையாடல் - காணொளி

காணொளிக் குறிப்பு, மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவுடன் பிபிசி தமிழ் உரையாடல் - காணொளி

மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநிலம் கொச்சின் அடுத்த மஞ்சும்மல் கிராமத்தை சேர்ந்த, 11 பேர் கொண்ட நண்பர்கள் 2006ல், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் உள்ள ‘குணா குகை’க்கு சுற்றுலா செல்கின்றனர்.

அப்போது, குழுவில் இருந்த சுபாஷ் என்பவர் பல நூறு அடி ஆழமுள்ள குகையின் குழியில் விழுந்த நிலையில், சுபாஷை அந்தக்குழுவில் இருந்த குட்டன் என்கிற சிஜூ டேவிட் தன் உயிரை பணயம் வைத்து குழியில் இறங்கி காப்பாற்றுவதும், அதற்கு அவர்களின் நண்பர்கள் உதவுவதும் தான் படத்தின் கதை. இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மையான சம்பவத்தில் மாட்டிக்கொண்ட மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினர் தங்களது அனுபவம் குறித்து பிபிசி தமிழுடன் உரையாடியுள்ளனர். முழு விவரங்ளை காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)