காப்பாற்ற முயன்ற நபருக்கு அதிர்ச்சி கொடுத்த கடமான்
காப்பாற்ற முயன்ற நபருக்கு அதிர்ச்சி கொடுத்த கடமான்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பியர்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள ஷெரிப் அலுவலகத்தில் கடமான் ஒன்றின் கொம்புகள் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் கயிற்றில் சிக்கியிருந்தது.
இதனை பார்த்த அதிகாரிகள் கடமானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கொம்பில் சிக்கியிருந்த கயிற்றை அதிகாரி ஒருவர் வெட்டி எடுக்க முயற்சித்தபோது மிரண்டுபோன கடமான் அவரை முட்டி தள்ளியது.
இதனை எதிர்பார்க்காத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒருவழியாக, கொம்பில் சிக்கியிருந்த கயிறை அதிகாரி வெட்டிபின்னர், கடமான் துள்ளி குதித்து ஓடி சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



