வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 100 குடும்பங்கள் வீடு கட்ட நிலம் வழங்கும் கேரள தொழிலதிபர்

காணொளிக் குறிப்பு, தொழிலதிபரான பாபி செம்மண்ணுர், 100 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக இடத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 100 குடும்பங்கள் வீடு கட்ட நிலம் வழங்கும் கேரள தொழிலதிபர்

வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பலரும் தற்போது ஒதுங்கக் கூட வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பலரும் தற்போது ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் இருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பலரும் தங்களின் வீடுகளை இழந்தவர்கள்,

பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை உணவு, உடைகள் என பல விதங்களிலும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அந்த வகையில், தொழிலதிபரான பாபி செம்மண்ணுர், 100 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக இடத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய பாபி செம்மண்ணுர், ‘ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் கட்டிய வீடுகளை அவர்கள் இழந்திருப்பதால், அவர்களுக்கு வீடு கட்ட நிலங்களை இலவசமாக தர முன்வந்திருப்பதாக கூறினார்.

பிபிசியிடம் பேசிய பாபி செம்மண்ணுர், "100 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள நிலங்களை தரவுள்ளோம். எங்களுக்குச் சொந்தமான 1000 ஏக்கர் அருகில் உள்ளது. அதிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளோம். தற்போது அனைவரும் உதவுகின்றனர். உணவு, உடைகளை வழங்குகின்றனர். ஆனால், வீடுகளை இழந்த மக்களுக்கு எங்கு செல்வோம் என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

வாழ்க்கை முழுவதும் அவர்கள் சேர்த்த பணத்தை இழந்துவிட்டனர். அதனால்தான், போச்சே ஃபேன்ஸ் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு வீடுகள், நிலங்கள் தர முக்கியத்துவம் தருகிறோம். வீடு கட்டுமானத்திலும் உதவ திட்டமிட்டுள்ளோம். அமைச்சர்களுடன் பேசினேன். பாதிக்கப்பட்டவரின் பட்டியலை தயாரிக்க வேண்டும். சரியான நபர்களுக்கு உதவி சேர்வதை உறுதி செய்ய வேண்டும்." என்று கூறினார்.

நிலங்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பாக அவர் ஏற்கனவே அரசிடம் பேசியுள்ளார். அரசும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. மீட்பு பணிகள் முடிந்த பின்னர், கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்குவதாக கூறிய நிலத்தை அவர் காண்பித்தார்.தங்க வியாபாரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பாபிக்கு சொந்தமாக 1000 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது.

வீடுகளை கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் வரை தேவைப்படும் என்றும் ஒருவேளை கூடுதலாக நிலம் தேவைப்பட்டால் அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

முழு விவரம் காணொளியில்.

தயாரிப்பு: பல்லா சதீஷ், பிபிசி தெலுங்கு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)