மாலத்தீவு: முகமது முய்சுவிடம் வளரும் சீன ஆதிக்கம் - இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது.
முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த கணக்கெடுப்பின் கீழ், இந்தியா மற்றும் மாலத்தீவு இணைந்து மாலத்தீவு பகுதிகளில் உள்ள நீர் பரப்பளவு, பவளப்பாறை, கடல் ஆகியவற்றை ஆய்வு செய்வதாக இருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



