காஷ்மீர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவர் - பயிற்சி மையம் செல்லாமல் நீட் தேர்வில் வென்றது எப்படி?

காணொளிக் குறிப்பு, காஷ்மீர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவர்
காஷ்மீர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவர் - பயிற்சி மையம் செல்லாமல் நீட் தேர்வில் வென்றது எப்படி?

காஷ்மீரில் தரி கிராமத்தின் முதல் பெண் மருத்துவராகிறார் ருமாயிஸா என்ற பெண். நீட் தேர்வு எழுத எந்த பயிற்சி மையத்துக்கு செல்லாமல் பல தடைகளுக்கு இடையே தன் கிராமத்தின் முதல் மருத்துவராகும் கனவை நிறைவேற்றப் போகிறார்.

பயிற்சி நிறுவனத்துக்கு செல்லாமல் எப்படி படிப்பது என கலங்கிய ருமாயிஸாவுக்கு, வீட்டிலேயே தயார் செய்து நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவரின் கதை ஊக்கமாக இருந்துள்ளது. அவரது ஆசிரியர் அலெக் மிகவும் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.

ஏழை கூலி தொழிலாளியான ருமாயிஸாவின் தந்தை ஜஹாங்கிர் கான், தன் வறுமை காரணமாக படிக்க வைக்க முடியாதோ என்று கவலைப்பட்டதாக தெரிவித்தார்.

ருமாயிஸாவின் வெற்றியை அவரது குடும்பம் மட்டுமல்ல, அந்த கிராமமே கொண்டாடி வருகிறது.

காஷ்மீர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவர்
படக்குறிப்பு, காஷ்மீர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: