உருகி, உருகி ஓவியம் வரையும் திருப்பத்தூரின் மெழுகுவத்தி ஓவியர் - காணொளி
பொதுவாக ஓவியக்கலை என்றால், தூரிகை, பென்சில், ஆகியவற்றை வைத்து படங்கள் வரைவதுதான் பலரது மனதிலும் தோன்றும்.
ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த விஜயகுமார், சற்று வித்தியாசமாக ஓவியங்கள் வரைகிறார்.
சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாய் இருந்த இவர் அதில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
சிறுவனாக இருந்தபோது, ஒருநாள் மின்வெட்டின்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த அவர், அந்த மெழுகுவத்தியிலிருந்து உருகிவிழும் மெழுகைவைத்து ஒரு ஓவியத்தை வரைந்தார். அப்போதிருந்து அது அவருக்கு ஒரு ஆர்வமாக மாறிவிட்டது.
இந்த முறையைப் பயன்படுத்தி தலைவர்கள், தியாகிகள் ஆகியோரின் ஓவியங்களை வரைகிறார்…
இடையில் மெழுகுவத்தி ஓவியம் வரைவதைக் கைவிட்டிருந்த இவர், கோவிட் தொற்றுநோய் பொதுமுடக்கக் காலத்தில் மீண்டும் அதைக் கையிலெடுத்ததாகச் சொல்கிறார். அது அவருக்கு அங்கீகாரத்தையும் பெறுத்தந்ததாகச் சொல்கிறார்.
இந்தக் கலையை பரவலாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறார் விஜயகுமார்.
தயாரிப்பு: சுஜாதா, பிபிசி தமிழுக்காக
படத்தொகுப்பு: நிஷாந்த், பிபிசி தமிழுக்காக

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



