தாயிடம் சேர்ந்த குட்டியானை - நெகிழ்ச்சியான காட்சிகள்

காணொளிக் குறிப்பு, தாயுடன் சேர்ந்த பின் நிம்மதியாக படுத்துறங்கும் குட்டியானை
தாயிடம் சேர்ந்த குட்டியானை - நெகிழ்ச்சியான காட்சிகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை.

வனத்துறையின் டிரோன் மூலம் எடுக்கப்பட்ட அந்த காணொளி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. வனத்துறை இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது எனவும், இப்போது யானைகள் கூட்டம் கேரள எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

தாயிடம் சேர்க்கப்பட்ட குட்டியானை

பட மூலாதாரம், FOREST DEPARTMENT

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)