Ind vs Eng போட்டி: இந்த முக்கிய தருணங்கள் ஆட்டத்தை மாற்றுமா?
Ind vs Eng போட்டி: இந்த முக்கிய தருணங்கள் ஆட்டத்தை மாற்றுமா?
டி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மும்பை வான்கெடேவில் இன்று (மார்ச் 5) இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டிக்குள் இரு அணிகளுமே ஒரே மாதிரியான வெற்றிகளைத் தொடர்ந்து களமிறங்குகின்றன.
பரபரப்பான போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வந்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.
அதேபோல் தான் இங்கிலாந்தும். அவர்களின் கடைசி சூப்பர் 8 போட்டியில் தோற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து நியூசிலாந்தை வீழ்த்தியது.
எப்போதுமே கடினமான போட்டியை வென்று வருவது எந்த அணிக்குமே கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்.
இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய முக்கிய தருணங்கள் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை ஷைலஜா சுந்தர் இந்தக் காணொளியில் அலசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



