'ரீல்ஸ் தாத்தா'வாக பிரபலமான 60 வயது மீனவர் - எப்படி தெரியுமா?
அறுபது வயதான மீனவர் நாகேஸ்வர ராவ், போட்டோஷூட்களுக்கான வழிகாட்டுதல், போஸ் கொடுக்க குறிப்பு வழங்குதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், “ரீல்ஸ் தாத்தா”வாக பிரபலமடைந்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்திலுள்ள வத்ரபள்ளியைச் சேர்ந்த பி. நாகேஸ்வர ராவ், கடந்த மூன்று ஆண்டுகளில் ‘படகு புகைப்பட இயக்குநராக’ பெரியளவில் பிரபலம் அடைந்துள்ளார். அழகிய மலைகள், அல்லி மலர்கள் நிறைந்த நீர்நிலைகளைக் கொண்ட வத்ரபள்ளி போட்டோஷூட்களுக்கான சிறந்த இடமாக உள்ளது.
நாகேஸ்வர ராவ் தனது படகில் ஜோடிகளை போட்டோஷூட்டுக்காக அழைத்துச் செல்கிறார். எண்ணற்ற புகைப்படக் கலைஞர்களை கவனிப்பதன் மூலம், கேமராவில் எந்த போஸ்கள் சிறப்பாகத் தெரியும் என்பதை இறுதியில் சரியாகக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் அவர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



