மணிப்பூரில் இணைய வசதிக்கு மீண்டும் தடை - தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் இணைய வசதிக்கு மீண்டும் தடை - தற்போதைய நிலை என்ன?
மணிப்பூரில் இணைய வசதிக்கு மீண்டும் தடை - தற்போதைய நிலை என்ன?

மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய செய்தித்தாள்களை பார்த்தால், பாதுகாப்பு படையினர் தள்ளிவிட்டது போன்ற காரணங்களால் 125 – 170 மாணவர்கள் போராட்டத்தில் காயமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் பெல்லட் குண்டுகளால் காயம் ஏற்பட்ட செய்திகளையும் காணமுடிகிறது. இதனால் பல மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜூலை அன்று காணாமல் போன 17 வயது பெண் மற்றும் 20 வயது ஆண் ஆகியோரின் உயிரற்ற உடல்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவின. இதையடுத்து, இணைய வசதிகளுக்கான தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் என்ன என்பதை காணொளியில் பார்க்கலாம்.

மணிப்பூரில் தற்போதைய நிலை
படக்குறிப்பு, திவ்யா ஆர்யா, பிபிசி செய்தியாளர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: