கடுமையான பனிப்புயலால் திணறும் அமெரிக்க மாகாணங்கள்
கடுமையான பனிப்புயலால் திணறும் அமெரிக்க மாகாணங்கள்
அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.
மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



