தாய்லாந்தில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்: கூரையைப் பிரித்து தப்பித்த குடும்பம் - காணொளி

காணொளிக் குறிப்பு,
தாய்லாந்தில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்: கூரையைப் பிரித்து தப்பித்த குடும்பம் - காணொளி

மலேசியாவின் எல்லையை ஒட்டியுள்ள தாய்லாந்து வணிக நகரான ஹாட் யாய்-இல், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது.

இடைவிடாமல் பெய்த மழையால் மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்தது.

தாய்லாந்தைச் சேர்ந்த குடும்பம் வெள்ளத்தில் இருந்து தப்புவதற்காக கூரையை பிரித்துக்கொண்டு வெளியேறினர். 5 பேரைக் கொண்ட இந்த குடும்பம், மீட்புக் குழு வரும்வரை துணிகளை காற்றில் வீசி உதவி கோரினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு