2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதி ப்ரோ லீக் தொடரில் அல் கலீஜ் அணிக்கெதிராக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தார் 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் போட்டியில் 4-1 என ரொனால்டோவின் அல் நசர் அணி வெற்றி பெற்றது.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த கோப்பையை வென்றதும் தனித்துவமாகக் கொண்டாடினார். நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது போல் வால்ட்டில் 6.3 மீட்டர் தூரம் தாண்டி, தன்னுடைய முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியத்தார் ஸ்வீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அந்த சாதனை படைத்ததும் கேலரியில் இருந்த ரசிகர்களோடு அவர் அதைக் கொண்டாடினார்
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஐபிஎல் கோப்பையை ஏந்த காத்திருந்த கோலி, அந்தக் கனவு நனவானதும் தன் உணர்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார் கியூபாவைச் சேர்ந்த கியார்மோ வரோனா கொன்சாலஸ். எறிவதற்கு முன்பாக அவர் இப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியின் ரசிகர்கள் வைத்த பேனர் இது. அந்த அணி மேனேஜர் லூயிஸ் என்ரீக்கேவின் மகள் ஜானா 2019-ஆம் ஆண்டு இறந்தார். 9 வயதான ஜானா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜானா பிஎஸ்ஜி அணியின் ஜெர்ஸி அணிந்திருப்பதுபோன்று வடிவமைத்து தங்கள் மேனேஜரை ரசிகர்கள் நெகிழவைத்தனர். இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தியது பிஎஸ்ஜி. அவர்களின் நீண்ட நாள் லட்சியத்தை, என்ரீக்கே பதவியேற்ற பிறகே அவர்களால் அடையமுடிந்தது
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 14 வயதில் சதம் அடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அன்று பதிவு செய்திருந்தார் வைபவ்.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைக் கொண்டாடும் விராட் கோலி. இது கோலியின் 52வது ஒருநாள் போட்டி சதம். இதன்மூலம், ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) கோலி முறியடித்தார்.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் தகுதிச் சுற்றின்போது நியூசிலாந்து வீரர் ஜார்டி பீமிஷ் தடுமாறி கீழே விழ, பின்னால் ஓடிவந்த வீரரின் ஷூ அவரது முகத்தில் பட்டது. இருந்தாலும், மீண்டும் எழுந்து ஓடி தகுதி பெற்ற பீமிஷ், இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கமும் வென்றார்.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது இந்தியா. கடினமான அந்தப் போட்டியில் சதமடித்து இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அந்தத் தொடரின் பாதியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தவர், அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று இப்படியொரு ஆட்டத்தையும் கொடுத்தார். இந்தியாவை வெற்றி பெற வைத்த பிறகு கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெமிமா.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் நடந்த முதல் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செல்சீ சாம்பியன் பட்டம் வென்றது. வழக்கமாக கோப்பையை அணியிடம் அளிப்பவர்கள், அதன்பிறகு விலகிவிடுவார்கள். ஆனால், செல்சீ அணிக்குக் கோப்பையைக் கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கேயே சில நேரம் இருந்து அந்த அணியின் கொண்டாட்டத்தோடு பங்கெடுத்தது பரவலாகப் பேசப்பட்டது
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெகுகாலம் ஐசிசி கோப்பைக்காகக் காத்திருந்த தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே அடையாமல் ஆதிக்கம் செலுத்தி தங்கள் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தது தென்னாப்பிரிக்க அணி.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த டியோகோ ஜோடா, ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருடைய முன்னாள் அணியான வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஜோடாவின் குழந்தைகளை மைதானத்துக்குள் அழைத்து வந்தார் லிவர்பூல் அணியின் கேப்டன் வேன் டைக். இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்து ஸ்டம்பை நோக்கிச் செல்ல, அதைத் தடுக்க கால்பந்து வீரரைப் போல் காலை நீட்டி உதைத்தார் இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு