காணொளி: இந்தோனீசியாவில் 7 மாடி கட்டத்தில் தீ - உள்ளே சிக்கியவர்கள் மீட்கப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவில் தீ விபத்து - 22 பேர் உயிரிழப்பு
காணொளி: இந்தோனீசியாவில் 7 மாடி கட்டத்தில் தீ - உள்ளே சிக்கியவர்கள் மீட்கப்பட்ட காட்சி

இந்தோனீசியாவில் ஜகார்த்தா நகரில் உள்ள ஒரு அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு மாடி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது சில ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக நகர காவல்துறைத் தலைவர் சுசத்யோ தெரிவித்தார்.

தீயணைப்பு படை 28 வாகனங்களையும் சுமார் 100 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியது. தீவிர முயற்சிக்குப் பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் இப்போது மேல் தளங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள டிரோன் உற்பத்தி நிறுவனத்தில் பேட்டரி வெடித்ததில் ஏற்பட்ட தீ மேல்நோக்கி பரவியதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், அதில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார். இதில் பெரும்பாலோர் புகையை சுவாசித்ததால் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு