ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியில் என்ன உள்ளது?

காணொளிக் குறிப்பு, விமானத்தின் பிளாக் பாக்ஸ் என்றால் என்ன? அதில் என்ன உள்ளது?
ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியில் என்ன உள்ளது?

ஆமதாபாத் விமான விபத்துக்கு பின் பரவலாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று கருப்பு பெட்டி என்று சொல்லப்படக்கூடிய 'பிளாக் பாக்ஸ்'. இது இந்த விமான விபத்தின் போது மட்டுமல்ல, எப்போதெல்லாம் விமான விபத்து நடக்கிறதோ அப்போதெல்லாம் பேசப்படுகிறது. சரி, பிளாக் பாக்ஸ் என்றால் என்ன?

Black Box என்பது electronic recording device என சொல்லப்படக்கூடிய மின்னணு பதிவு சாதனம். இது விமான பயணத்தின் போது நிகழும் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளையும் பதிவு செய்கிறது.

Black Box-ல் Flight Data Recorder மற்றும் Cockpit Voice Recorder ஆகிய இரண்டு முக்கிய பகுதிகள் இருக்கும். விமானம் பறக்கும் வேகம், திசை, உயரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை Flight Data Recorder பதிவு செய்யும்.

Cockpit Voice Recorder- விமானி அறையில் நடக்கும் உரையாடல்கள் பதிவு செய்யும், இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளானால், விமானிகள் என்ன உரையாடினார்கள் என்பதை அறிய முடியும். இதில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் மற்றும் விமானத்தில் விமானியால் மேற்கொள்ளப்படும் அறிவிப்பு ஆகியவையும் பதிவு செய்யப்படும். இது பிரஞ்சு பொறியியலாளர் François Hussenot-னால் 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

விமானம் விபத்துக்குள்ளாகும் போது Black Box பாதிக்காத வகையில் விமானத்தின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக வெப்பநிலை மற்றும் அதிக நீரழுத்தம் ஆகியவற்றை தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Black Box பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது கறுப்பு நிறத்தில் இருக்காது. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் இடிபாடுகளில் இருந்து எளிதில் Black Box-ஐ கண்டறியவே இது ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்படுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு