மூன்றாவது நாளாக லாஸ் ஏஞ்சலஸில் தொடரும் வன்முறை: என்ன நடக்கிறது?
மூன்றாவது நாளாக லாஸ் ஏஞ்சலஸில் தொடரும் வன்முறை: என்ன நடக்கிறது?
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று ICE எனப்படும் Immigration and Customs Enforcement அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் மூன்றாவது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்துக்கு மாகாண நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன.
சனிக்கிழமை முதல் நடந்து வரும் இந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தன என்றும், வன்முறையாக மாறிய நிகழ்வுகளை உள்ளூர் அதிகாரிகள் சமாளிக்க முடியும் என்றும் லாஸ் ஏஞ்சலஸின் காவல் துறையினர் தெரிவித்திருந்திருந்தனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



