'இந்தியா, பாகிஸ்தான் மோதலில் சீனா மறைமுகமாக தலையிட்டது' - அமெரிக்க அறிக்கை சொல்வது என்ன?
இந்த ஆண்டு மே மாதம் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு நாள் மோதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இந்தியாவில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அறிக்கையில், அந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் கை ஓங்கி இருந்தது சீன ஆயுதங்களின் திறனை வெளிப்படுத்தியதாகவும், சீனா இந்த நிலைமையை தனது ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கவும் விளம்பரப்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளது.
சரி, அமெரிக்க நாடளுமன்றம் வெளியிட்ட அறிக்கை என்ன? அதில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? இந்தியாவில் இதைப்பற்றி என்ன விவாதிக்கப்படுகிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



