நொந்து நூடூல்ஸ் ஆனது யார்? ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வார்த்தை மோதல்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் "யார் அந்த தியாகி" என்ற பதாகைகளுடன் வந்தனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய அதிமுகவினர், மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி ஊழல் செய்த தியாகி யார்? என்று கேள்வி எழுப்பும் விதமாக முழக்கங்களை முன் வைத்தனர்.
சட்டமன்றத்தினுள் பதாகைகளை காட்டியதால் அவர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு, அவர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவித்தார். இதன் பின்னர் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், சிக்கியிருக்கும் பல்வேறு வழக்குகளிலிருந்து தப்புவதற்காக யாருடைய காலிலோ போய் விழுந்தாதால்,நொந்து நூடுஸ் ஆக மாறியிருக்கும் அதிமுக தொண்டர்கள் தான் இன்று தியாகியாக இருக்கின்றனர். முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக யாடைய காலில் விழுந்து ஏமாற்றி விட்டு போனாரோ அந்த அம்மையார் தான் தியாகியாக இருக்கிறார்" என்றார்.
சட்டமன்றத்திற்கு வெளியே இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,"அதிமுக எதற்குமே நொந்து நூலானதே கிடையாது" என்று கூறினார். மேலும், "நான் முதலமைச்சராக இருக்கும் போது, அன்று முதல் இன்று வரை ஊடகங்கள் என்னை விட்டு வைத்ததே கிடையாது. அனைத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சசியது கிடையாது" என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





