காணொளி: ஜென் Z இளைஞர்கள் விரும்பும் 'பஜனை கிளப்பிங்' பற்றி தெரியுமா?
காணொளி: ஜென் Z இளைஞர்கள் விரும்பும் 'பஜனை கிளப்பிங்' பற்றி தெரியுமா?
வண்ணமயமான விளக்குகள், துள்ளலான இசை... அந்தத் தாளத்திற்கு நடனமாடும் இளைஞர்கள்... ஆனால், இதுவொரு இரவு விடுதியோ இசை நிகழ்ச்சியோ இல்லை. இது பஜனை கிளப்பிங்.
டெல்லியில் ஒரு வார இறுதியின் மாலை வேளையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு கூடியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். பலர் ஜென் Z தலைமுறையினர். இங்கு நடப்பது பக்தி இசை கலந்த ஓர் இசை நிகழ்ச்சி.
இதுவொரு பாரம்பரிய பக்திப் பாடல் நிகழ்ச்சியல்ல, வழக்கமான கிளப்பிங் செயல்பாடும் அல்ல. அப்படியெனில் இதன் பெயர்தான் என்ன?
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



