காணொளி: போலீஸ் வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்

காணொளிக் குறிப்பு, போலீஸ் வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்
காணொளி: போலீஸ் வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பனி படர்ந்த சாலையில் போலீஸ் வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த குல் ஷெராஸ் என்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு மூத்த காவல் கண்காணிப்பாளர் ஃபரூக் கைசர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள், போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள் என யாராக இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டம், போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்ததாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு