விருதுநகர் தொகுதி: முரசு, தாமரையை சமாளிக்குமா 'கை'? - காணொளி
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் உள்ளது. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த தொகுதியின் கீழ் வருகின்றன.
காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் ஆனது வாலாறு. காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை வெற்றிபெற்ற மாணிக்கம் தாக்கூர் 4-வது முறையாக மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரைப் பிரபலம் ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கெளசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் களம் யாருக்கு சாதகமாக உள்ளது?
செய்தியாளர்: தங்கதுரை குமாரபாண்டியன்
படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



