சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே தக்க வைத்த வரலாறு - தோனி படை செய்தது என்ன?
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே தக்க வைத்த வரலாறு - தோனி படை செய்தது என்ன?
வரலாறு முக்கியம் என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும்போதெல்லாம், சன்ரைசர்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணி சிம்மசொப்பனமாகவே இருந்துள்ளது. இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை சிஎஸ்கே இந்தப் போட்டியில் தக்கவைத்தது.
சென்னையில் நடந்த 23 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 19 போட்டிகளில் வென்று, சூப்பர் கிங்ஸாக வலம் வருகிறது.
சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் சென்னையில் தோல்வி அடைந்தநிலையில், இந்த போட்டிக்காக முழுமையாகத் தயாராகி வந்திருந்தது என்பது பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் தெளிவாகத் தெரிந்தது( முழு தகவல் காணொளியில்)

பட மூலாதாரம், BCCI/IPL
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



