கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை - காணொளி

காணொளிக் குறிப்பு, கவுதம் கம்பீர்: ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை
கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை - காணொளி

கொல்கத்தா முதன் முதலில் 2012-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அப்போது கவுதம் கம்பீர் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கெளதம் தான் கேப்டனாக இருந்தார்.

தற்போது கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியனாகியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ளார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.

முன்னதாக, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் ஒரு ஆலோசகராக, லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் வெற்றிக்குப் பிறகு, கம்பீரின் கடந்தகால வெற்றிகளையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

கவுதம் கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)