இந்தியா Vs பாகிஸ்தான்: மோதியை விமர்சித்த பிலாவல் - ஜெய்சங்கரின் எதிர்வினையால் சூடுபிடித்த ஐ.நா

ஜெயங்கர், இந்திய வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம், UN

படக்குறிப்பு, எஸ். ஜெயங்கர், இந்திய வெளியுறவு அமைச்சர்

ஒசாமா பின்லேடனை போற்றக் கூடிய மற்றும் லக்வி, ஹஃபீஸ் சயீத், சாஜித் மிர், தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பற்றி முன்வைக்கும் தனிப்பட்ட தாக்குதல் அந்த நாட்டுக்கே "ஒரு புதிய சிறுமை" என்று இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. என்ன நடந்தது?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி, இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை எதிர்த்தார்.

அவருக்கு அதே மன்றத்திலேயே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வினையாற்றினார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக ஒரு மாதத்திற்கு இந்தியா பொறுப்பேற்றது.

அந்த நேரத்தில், பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் விளக்கத்திற்குப் பிறகு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தின் போது, பாகிஸ்தான் அமைச்சர் சர்தாரி காஷ்மீர் குறித்த கேள்வியை எழுப்பினார்.

காஷ்மீர் பிரச்னையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை இந்தியா அமல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த சர்தாரி, காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் பற்றி பாகிஸ்தான் செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த பிலாவல், இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

பிலாவல் பூட்டோவின் இந்த கருத்து இந்தியாவில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இதை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பிலாவல் பூட்டோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரிவான பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிர்வினை

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியும் பாகிஸ்தான் அமைச்சரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றினார். அதன் சில அம்சங்கள்: பாகிஸ்தானைப் பொறுத்தவரை என்றாலும் கூட, இந்த கருத்து மிகவும் தாழ்வானது. பாகிஸ்தானின் சிறுபான்மையினர் மீதான அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை.

  • இந்தியாவை குற்றம் சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி, தங்குமிடம் மற்றும் ஆதரவு அளிப்பதில் பாகிஸ்தானின் மறுக்க முடியாத பங்கு, எப்போதும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.
  • பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் முரட்டுத்தனமான வார்த்தைகள் அந்த நாடு பயங்கரவாதத்தை பினாமியாக பயன்படுத்தியதன் விளைவுதான்.
  • நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட், லண்டன் போன்ற பல நகரங்கள் 'பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு' சாட்சியாக உள்ளன. இந்த பயங்கரவாதம் அவர்களின் சிறப்பு பயங்கரவாத மண்டலத்திலிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • 'மேக் இன் பாகிஸ்தான்' தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் ஒசாமா பின் லேடனை 'ஒரு தியாகி' என்று போற்றுகிறது லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு அடைக்கலம் அளிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட 126 பயங்கரவாதிகளில் 27 பேர் உலகின் வேறு எந்த நாட்டிலும் வசிக்கவில்லை.
  • நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் மும்பை தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான அஞ்சலி குல்தேவின் கருத்துகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவனமாகக் கேட்பார் என்று நாங்கள் விரும்பினோம்.
  • பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிடம் இருந்து 20 கர்ப்பிணி பெண்களின் உயிரை காப்பாற்றினார் அஞ்சலி.
  • பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது நாட்டில் பயங்கரவாதத்தின் தலைசிறந்த மனப்பான்மை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • பாகிஸ்தானில் 'பயங்கரவாதம்' அரசின் கொள்கையாகப் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அரசியல் ஆகிப்போன விவகாரம்

இதே வேளை, பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவர் தேஜஸ்வி சூர்யா தமது சமூக ஊடக பக்கங்களில் இந்த விவகாரத்தை எழுப்பி சில இடுகைகளை பதிவிட்டார்.

"பிரதமர் மோதிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கேவலமான மற்றும் இழிவான கருத்துகளை யுவ மோர்ச்சா கடுமையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை மட்டுமே ஏற்றுமதி செய்யும் நாடு அது. அவரிடமிருந்து இதைவிட சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று அவர் கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

முன்னதாக, பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் ஆசாத் மஜீத் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள வெளிநாட்டு தூதர்களிடம், தனது நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சில ஆவணங்களை ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹினா ரப்பானி கர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "பாகிஸ்தானில் நடந்த சமீபத்திய பயங்கரவாதச் சம்பவத்துக்கு இந்தியாதான் பொறுப்பு," என்று கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

ஆனால், அதற்கு மறுதினமே பாகிஸ்தான் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐ.நா மன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடுமையாக நிராகரித்தார்.

"அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்-லேடனை உபசரித்து, அண்டை நாட்டு நாடாளுமன்றத்தைத் தாக்கக்கூடிய ஒரு நாடு, ஐ.நா.வில் 'போதனையாளராக' இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று ஜெய்சங்கர் கூறினார்.

"பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையம்"

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 கர்ப்பிணிகளை காப்பாற்றிய மும்பை செவிலியர் அஞ்சலி குல்தேவையும் இந்த மன்றத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுப் பேசினார்.

இப்போது அவர், மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கூறினார்.

அவர் இந்த மன்றத்தில் பேசுவதற்கு ஒரு நாள் முன்பு தான், இந்திய செவிலியர் அஞ்சலி குல்தே, 26/11 அன்று இரவு 20 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றிய தமது அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

அஞ்சலி குல்தேவ்

பட மூலாதாரம், UN

படக்குறிப்பு, அஞ்சலி குல்தேவ், செவிலியர்

"எனது சீருடை எனக்கு தைரியத்தை அளித்தது, நர்சிங் மீதான எனது ஆர்வம் எனக்கு சிந்தனையின் தெளிவைக் கொடுத்தது," என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அஞ்சலி பேசினார்.

இரண்டாவது முறையாக எதிர்வினை

கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதம் குறித்த கேள்விக்கு பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் இரண்டு முறை பதிலடி கொடுத்துள்ளார்.

தீவிரவாதத்தின் மையமாக உலகம் பாகிஸ்தானை பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹினா ரப்பானி கர், இந்தியாவை விட உலகில் எந்த நாடும் தீவிரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். அவரது கூற்றுக்கு பதில் அளித்துள்ள இந்திய அமைச்சர் ஜெய்சங்கர்,"கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகம் கோவிட் நோயுடன் போராடியது எனக்குத் தெரியும். இதன் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் Brain Fog (சிந்திக்க சிரமப்படுதல்) உடன் போராடுகிறோம். ஆனால் உலகம் இதுபோல இருந்ததில்லை.

பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது? இந்தப் பிராந்தியத்திலும் (தெற்காசியா) அதற்கு அப்பாலும் வெளிவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் யாருடைய கைரேகைகள் உள்ளன என்பதை எல்லாம் மறந்து விடுங்கள். முதலில், இதுபோன்ற கற்பனைக் கதைகளில் ஈடுபடுவதற்கு முன் அவர்கள் (பாகிஸ்தான்) தங்களின் நிலை பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று ஜெய்சங்கர் கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

ஹிலாரி கிளிண்டன் கருத்தை நினைவுகூர்ந்த ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் இப்படி பேசும்போது, 2011ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பேசிய அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் புகழ்பெற்ற உரையை நினைவுபடுத்தினார். "ஹினா ரப்பானி கர் கருத்துகள் தொடர்பான செய்திகளைப் படித்தேன். அப்போது ஒரு தசாப்த காலத்துக்கு முந்தைய பழைய விஷயம் எனக்கு நினைவிற்கு வந்தது. ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, அப்போது ஹினா ரப்பானி கர் அமைச்சராக இருந்தார்." ஹிலாரி கிளிண்டன், அவருக்குப் பக்கத்தில் நின்றபடி, "உங்கள் வீட்டில் பாம்புகளை வைத்திருந்தால், அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவை அவற்றை வைத்திருப்பவர்களையும் கடிக்கும்," என்று கூறினார் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேலும், "பாகிஸ்தானுக்கு அறிவுரை கேட்பதது பிடிக்காது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே பாகிஸ்தான் முதலில் தனது வழியை சீர் செய்து கொண்டு நல்ல அண்டை நாடாக மாற வேண்டும்," என்று ஜெய்சங்கர் பேசினார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

ஹினா ரப்பானி முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ஹினா ரப்பானி, "இந்தியாவை விட வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை பயன்படுத்தவில்லை" என்று குற்றம்சாட்டினார். அவர் இந்த கருத்தை வெளியிட்ட அதே நாள், பாகிஸ்தானை சீர்குலைக்கும் இந்தியாவின் முயற்சியை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் செய்தித்தாளான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

லாகூரில் உள்ள ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீத்தின் வீட்டில் இந்தியாதான் குண்டுவெடிப்பை நடத்தியது என்று உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறிய ஒரு நாள் கழித்து ஹினாவின் செய்தியாளர் சந்திப்பு வந்தது. அந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையொட்டியே இந்தியாவை ஹினா குற்றம்சாட்டிப் பேசியபோது, "பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தங்களை அதில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார். "இந்தியா தொடர்ந்து கிளர்ச்சி நாடு போல் செயல்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை இந்த நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது இந்த நாட்டின் மனநிலையை காட்டுகிறது" என்றும் ஹினா கூறினார்.

விடாமல் எதிர்வினையாற்றிய ஜெய்சங்கர்

இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நீங்கள் தவறான அமைச்சரை கேள்வி கேட்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை நம்பி இருக்கும் என்பதை அவரால் மட்டுமே சொல்ல முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் சொல்வதையெல்லாம் நம்ப உலகம் ஒரு முட்டாள் அல்ல" என்றும் ஜெயங்கர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: