நைஜீரியாவில் மரணத்துடன் விளையாடும் பாரம்பரிய 'டம்பே' விளையாட்டு
நைஜீரியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் டம்பேவும் ஒன்று.
குத்துசண்டை போலவே தோன்றும் இந்த போட்டியை நவீனப்படுத்துவதற்காக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம், வீரர்களுக்கு சலிப்பு ஏற்படும் வரையிலோ அல்லது ஒருவருக்கு காயம் ஏற்படும் வரையில் சண்டை நீடிக்கும். இப்போதெல்லாம் மூன்று நிமிடங்கள் என்ற கணக்கில், மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
உலக அளவில் இந்த விளையாட்டை பல லட்சக்கணக்கானோர் விரும்பி பார்க்கின்றனர். அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் இந்த விளையாட்டிற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்த விளையாட்டின் ஆக்ரோஷமான ஆட்டக்காரர் கரோனா வைரஸ் என்றழைக்கப்படும் இந்த இளைஞர்.
சமீபத்தில் ஒரு கடுமையான போட்டியில் வென்று 185 அமெரிக்க டாலர் பரிசை வென்றுள்ளார். இது நைஜீரியாவின் மாத சம்பளத்தை விட 5 மடங்கு அதிகம். துடிப்புடன் விளையாடும் இவர் இதில் மேலும் கவனம் செலுத்தி வருகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



